[X] Close

தப்பிய கொள்ளையர்களை துரத்தி பிடித்த காவல்துறை - சிசிடிவி வெளியீடு

cctv-scenes-published-about-police-trace-to-jewelry-theft

திருச்சி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட இருவர் திருவாரூரில் தப்பிச் சென்ற போது போலீசார் இருச்சக்கர வாகனத்தில் துரத்தி சென்றனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

திருச்சி நகைக்கடையில் சுவரை ஓட்டை போட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து திருவாரூரில் விளமல் என்ற இடத்தில்‌ காவல்துறையினர் வாகன சோதனையில்‌ ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியே இருச்சக்கர வாகனத்தில் வந்த இருவர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர். 

இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று மடப்புரம்‌ கமலாம்பாள் நகரில் அவர்களை மடக்கிப் பிடித்தனர். அப்போது வாகனத்தின் பின்னால் இருந்த சுரேஷ் என்பவன் தப்பியோடி விட்டான். ஆனால் வாகனத்தை ஓட்டிய மணிகண்டன் மட்டும் மாட்டிக்கொண்டான். மணிகண்டன் மூலமே நகைக்கடை கொள்ளை குறித்து துப்பு துலங்கியது. கொள்ளையனை துரத்திச் சென்று பிடித்த உதவி காவல் ஆய்வாளர் பாரத் நேருவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 


Advertisement

 

இந்நிலையில் கொள்ளையர்கள் தப்பிக்கும் காட்சியும் பாரத் நேரு துரத்தி சென்ற காட்சியும் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close