Published : 01,Oct 2019 12:14 PM

தளபதி64 படத்தில் இணைந்த ‘அங்கமாலி டைரீஸ்’ புகழ் ஆண்டோனி 

Angamaly-Diaries-hero-Antony-Varghese-on-thalapathy64-onboard

விஜய் நடப்பில் அடுத்து உருவாகி வரும் தளபதி64 படத்தில் மலையாள பட நடிகர் ஒருவர் இணைந்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்துள்ளார் விஜய். இந்த படம் இந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதையடுத்து ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்புகள் மூன்றுநாட்களுக்கு நாள்தோறும் 5 மணிக்கு வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருந்தது. இந்தப் படத்தில், விஜய் சேதுபதி இடம்பெறுவதை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

                                          

இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு இரண்டாவது அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரீஸ் படத்தில் நடித்த ஆண்டோனி வர்ஹீஸ் தளபதி64 படத்தில் இணைகிறார். அங்கமாலி டைரீஸ் படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. தமிழகத்திலும் இந்தப் படத்திற்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.

                 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்