எடியூரப்பா ஒரு பலவீனமான முதலமைச்சர் எனவும் அவரைப் போன்று நான் வெறுப்பு அரசியலில் ஈடுபட்டதில்லை எனவும் கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்ல நான் பரிந்துரைக்கிறேன். அவர் ஒரு பலவீனமான முதலமைச்சர். நான் பதவியில் இருந்தபோது அவரைப்போன்று ஒருபோதும் வெறுப்பு அரசியலில் ஈடுபட்டதில்லை. பணமதிப்பிழப்பு வழக்கில் டி கே சிவகுமருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதன் மூலம் தற்போதைய மாநில அரசு எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
சிவக்குமாருக்கு ஜாமீன் கொடுப்பதில் என்ன பிரச்னை என எனக்குப் புரியவில்லை. தற்போதைய கர்நாடக அரசாங்கம் தூய்மையற்ற அரசாங்கம். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை கூட கொடுக்கவில்லை. இந்தச் சம்பவம் நடைபெற்று 50 நாட்களுக்கு மேலாகிவிட்டது, ஆனால் இன்னும் மாநில அரசு மக்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கவில்லை. கடந்த மாதத்தில் பெய்த கனமழையால் 80 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால் இதுவரை பிரதமர் வந்து மாநிலத்தை பார்வையிடவில்லை.” எனத் தெரிவித்தார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!