[X] Close

தமிழர்களின் இட்லி, தோசை, வடை எனக்கு பிடிக்கும் - பிரதமர் மோடி

PM-modi-speaks-about-chennai-s-food

சென்னையின் காலை இட்லி, தோசை, வடை உற்சாகம் தரக்கூடியது என பிரதமர் மோடி தெரிவித்தார்


Advertisement

ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை பிரதமர் மோடி சென்னை வந்தார். விமான நிலையத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பிரதமருக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். பின்னர் மோடிக்கு பாஜக சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சி.பி ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உட்பட பலர் வரவேற்றனர். அப்போது விமான நிலையத்தில் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் பேசினார். 


Advertisement

பின்னர் சென்னை ஐஐடி சென்ற பிரதமர் மோடி, இந்திய- சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் உரையாற்றிய மோடி, ''தமிழர்களின் விருந்தோம்பல் சிறந்தது. சென்னையின் காலை இட்லி, தோசை, வடை உற்சாகம் தரக்கூடியது. அது எனக்கு பிடிக்கும். ஹேக்கத்தான் என்பது இளம்தலைமுறையினரின் அறிவுத்திறனை வளர்க்கக்கூடியது. ஹேக்கத்தான் வெற்றிக்கு உதவிய சிங்கப்பூர் கல்வி அமைச்சருக்கு நன்றி'' என தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close