[X] Close

அம்மாவை கண்டித்த பிரபல இயக்குனர்

Director-shouting-his-mother

’தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட தரமான படங்களை கோலிவுட்டிற்கு கொடுத்தவர் இயக்குனர் சீனு ராமசாமி. தன் அம்மா மீது அதிகப்படியான பாசம் வைத்துள்ளார். அவரின் இயக்கத்தில் வெளியான படங்களிலும் கூட தாய் பாசத்திற்கு முக்கியத்துவம் இருக்கும். இந்நிலையில் சீனு ராமசாமி, நல்லது செய்த தனது அம்மாவை கண்டித்துள்ளார். வேறு ஒன்றும் பயப்படும்படியான காரணம் இல்லை.


Advertisement

சமீபத்தில் சீனு ராமசாமியின் அம்மா, இவருக்கு தெரியாமல் திருப்பதி போய், ஏழுமலையானை தரிசித்துவிட்டு வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த சீனுராமசாமி, தனது ட்விட்டரில் கூறும்போது, ‘இந்த அற்பன் சீனு ராமசாமி வாழவேண்டுமென்று எனக்கு தெரியாமல் திருப்பதி போன அம்மாவை கண்டிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close