Published : 21,May 2017 05:29 AM

இனி ஃபேஸ்புக்கிலும் உணவு ஆர்டர் செய்யலாம்

Facebook-adds-food-ordering-so-you-never-have-to-leave

போதைக்கு அடிமையாகாத இளைஞர்கள் கூட ஃபேஸ்புக்கிற்கு அடிமையாகியுள்ளனர். அந்த அளவிற்கு இளைஞர்களை ஆட்கொண்டுள்ளது இந்த ஃபேஸ்புக். உலகம் முழுவதும் 200 கோடி பேர் பயன்படுத்தும் ஃபேஸ்புக்கில் உணவுகளை ஆர்டர் செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

இணையதளம் மற்றும் மொபைல் அப்ளிகேசனில் உணவு ஆர்டர் செய்து உண்ணும் பழக்கம் இளைஞர் முதல் பெரியவர்கள் வரை உள்ளது. இதனை தனக்கு சாதகமாக்கியுள்ளது சமூக வலைதளங்கள். அந்த வகையில் ஃபேஸ்புக் நிறுவனம், ‘ஃபேஸ்புக் ஆர்டரிங்க்’ என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில், வரும் அக்டோபர் மாதம் முதல் ஃபேஸ்புக்கில் உணவு ஆர்டர் செய்யும் புதிய வசதி நடைமுறைப்படுத்தவுள்ளது

ஃபேஸ்புக்கில் புதிய உணவு வரிசைப்படுத்தும் ஐகானைத் தட்டினால், ஃபேஸ்புக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள உங்கள் பகுதியில் உள்ள உணவகங்கள் பட்டியலைக் காண்பிக்கும். அதில் உணவை ஆர்டர் செய்து முகவரியை குறிபிட்டால் உணவு வீட்டிற்கே வந்துவிடும். பொழுதுபோக்குடன் உணவையும் அளிக்கும் ஃபேஸ்புக்கில் இந்த வசதி விரைவில் இந்தியாவிலும் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்