[X] Close

போட்டோ எடுக்க உடையில் தீ வைத்துக்கொண்ட மணப்பெண்

China-Bride-Fire

சீன மணப்பெண் ஒருவர், புகைப்படம் நன்றாக வருவதற்காக தனது திருமண உடையில் தீவைத்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த திருமண நிகழ்ச்சியை சிறந்த புகைப்பட கலைஞர்கள் சிறந்த முறையில் படம் பிடித்து அதனை நமக்கு இனிமையான நினைவுகளாக அமைய ஆல்பம் அமைத்து தருவார்கள். இங்கே ஒரு பெண் தனது திருமணம் புகைப்படம் நன்றாக வருவதற்காக மிக ஆபத்தான முறையை கடைபிடித்து உள்ளார்.

சீன மீடியாக்கள் தெரிவித்த தகவலின்படி சீனாவைச் சேர்ந்த ஒரு மணப்பெண் தனது மணப்பெண் உடையுடன் புகைப்படம் சிறப்பாக வர வேண்டும் என போட்டாகிராபரை கேட்டுக்கொண்டு உள்ளார். அதற்கான் போட்டா ஷூட், ஒரு காட்டு பகுதியில் எடுக்கப்பட்டது.


Advertisement

சிறப்பான புகைப்படம் வரவேண்டி மணப்பெண்ணும் போட்டாகிராபரும் சேர்ந்து திருமண உடையில் தீவைத்துள்ளனர். புகைப்படத்திற்கு லைட்டிங் நன்றாக கிடைக்க இதை செய்துள்ளனர். தீ மளமளவென உடை முழுவதும் பரவியுள்ளது. தீ எரிவதை கண்ட மணப்பெண் அலறியடித்து ஓடியுள்ளார். உடனடியாக அக்கம் பக்கம் இருந்தவர்கள் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close