[X] Close

வாக்கு எந்திரங்களின் நம்பகத்தன்மை....3ம் தேதி பரிசோதிக்கலாம் என்கிறது தேர்தல் ஆணையம்

EVM-issue

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை கட்சிகள் ஜூன் 3-ஆம் தேதி முதல் பரிசோதிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அண்மையில் உத்தரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. ஆனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்து பாரதிய ஜனதா வெற்றி பெற்றதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார். மேலும் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் முன்புபோல வாக்குச் சீட்டு முறையில் தேர்தலை நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இதையடுத்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படும் விதம் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று டெல்லியில் செயல் விளக்கம் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு முறை ப்ரோகிராம் செய்தால் சிப் எதுவும் பொருத்த முடியாது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் வைபை சிப் எதுவும் பொருத்தப்படுவதில்லை. வாக்குப்பதிவு நம்பகத்தன்மையை உறுதி செய்ய வரும் தேர்தல்களில் ஒப்புகை சீட்டு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும். எதிர்காலத்தில் அனைத்து தேர்தல்களிலும் ஒப்புகை சீட்டு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும் என்றார்.


Advertisement

வரும் ஜூன் 3-ஆம் தேதி முதல் தேசிய மற்றும் மாநில கட்சிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை பரிசோதிக்கலாம். முறைகேடு செய்ய முடியும் என்பதை காட்ட ஒவ்வொரு கட்சியும் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரங்களை தேர்வு செய்துகொள்ளலாம் என கூறியுள்ளார். தேர்தலின் போது வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாத்து வைக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்தார்.

Related Tags : EVM machine Election commission vote

Advertisement

Advertisement
[X] Close