ஜோதிகா நடித்துள்ள ’ராட்சசி’ படத்தை மலேசிய அமைச்சர் பாராட்டியுள்ளார்.
ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், 'ராட்சசி'. கவுதம் ராஜ் இயக்கியுள்ள இந்தப் படம், ஜூலை 5 ஆம் தேதி வெளியானது. படத்தைப் பார்த்த மலேசிய கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் படத்தை பாராட்டி யுள்ளார். இது தொடர்பாக பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ’இந்த படத்தை அதிகாரிகளோடு பார்த்தேன். இது அனைவரும் பார்க்க வேண்டிய படம். கல்வி அமைச்சராக இந்தப் படத்தை பார்ப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் நாட்டின் சூழலோடு பொருத்திப் பார்க்க முடிந்தது. கீதா ராணி (ஜோதிகா) க்கு சூப்பர் ஹீரோ கேரக்டர். நாம் செய்யவேண்டிய திட்டங்களும், மாற்றங்களும் இதில் வெற்றிகரமாக விவரிக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் படிப்பு நிறுத்தப்படும் பிரச்சனையில் காவல்துறை மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரையும் இந்த பிரச்னை யைத் தீர்க்க ஈடுபடுத்தியுள்ளார், கீதா. இதைத்தான் நாங்களும் செய்து கொண்டிருக்கிறோம். அனைத்து கல்வியாளர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் இந்தப் படத்தை பார்க்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்’’எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?