[X] Close

7 பேரை முன்கூட்டியே விடுவிக்கக் கோரிய நளினி வழக்கு தள்ளுபடி

Rajiv-Gandhi-assassination-case--HC-dismisses-Nalini---s-plea

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என நளினி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.


Advertisement

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள 7 பேரை முன் கூட்டியே விடுவிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத் தில் நளினி வழக்கு தொடர்ந்திருந்தார். 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து ஆளுநரிடம் அரசு கேட்க வேண்டும் என நளினி தரப்பில் வாதிடப்பட்டது.


Advertisement

தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மீதான நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என்றும் 7 பேர் விடுதலை விவகாரம் ஆளுநரின் பரீசிலனையில் உள்ளதாகவும் அரசுதரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தது. அப்போது வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 


Advertisement

Advertisement
[X] Close