Published : 18,May 2017 06:47 AM
தொடங்கியது கான் படவிழா: சிவப்பு கம்பளத்தில் தீபிகா

பிரான்சில் 70வது கான் திரைப்படவிழா கோலாகலமாகத் தொடங்கியது. திரைப்பட இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், சிறப்பு விருந்தினர்களை வரவேற்கும் சிவப்பு கம்பள நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தியாவின் தீபிகா படுகோன் மரூன் கலர் உடையில் தோன்றி ரசிகர்களை குஷிபடுத்தினார். ஹாலிவுட் நட்சத்திரம் ஜெசிகா காஸ்டெய்ன், சீன நட்சத்தரம் ஃபேன் பிங்பிங் உள்ளிட்ட பிரபலங்கள் விழாவில் பங்கேற்றுள்ளனர். 19 திரைப்படங்கள் விருது களத்தில் உள்ளன. பிரான்ஸ், பெல்ஜியம், சீனா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள், குறும்படங்கள் திரையிடப்படவுள்ளன. இங்கு தமிழ்த் திரைப்படமான ’சங்கமித்ரா’வின் அறிமுக நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.