[X] Close

வாட்ஸ்-அப் புளு டிக்கும் ஆதாரம்தான்!

Court-accepts-WhatsApp-blue-double-tick-as-receipt-proof

வாட்ஸ்அப்பின் புளு டிக் கொண்ட வண்ண நகலை டெல்லி நீதிமன்றம் ஆதாரமாக எடுத்துக்கொண்டது.

புதுடெல்லியில் உள்ள ரோஹினி நீதிமன்றத்தில் மாடல் டவுன் குடியிருப்பு பகுதிய சேர்ந்த ஒருவர், வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், சொத்து பங்கீடு தொடர்பாக தனது மகன் மற்றும் மருமகளுக்கு வாட்ஸ் அப் மூலம் நோட்டீஸ் அனுப்பியதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த நோட்டீஸ் தங்களுக்கு வந்து சேரவில்லை என எதிர்தரப்பினர் தெரிவித்திருந்தனர். எனவே, வழக்கு தொடர்ந்திருந்தவர், தான் அனுப்பிய செய்தியை படித்ததற்கான புளு டிக் உள்ள அந்த செய்தியை ஸ்கிரீன்சாட் எடுத்து நீதிமன்றத்தில் ஆதாரமாகச் சமர்ப்பித்தார். இதனை விசாரித்த நீதிபதி வாட்ஸ் அப் திரையின் ஸ்கிரீன் சாட்டை ஆதாரமாக எடுத்துக்கொண்டார்.

கடந்த மே 4ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் வாட்ஸ் அப் மற்றும் மின்னஞ்சல்களை ஆதாரமாக எடுத்துக்கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close