கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட தேநீர்க்கடை உரிமையாளர் ஒருவர், தனது வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் நாலு ரோடு பகுதியில் எட்டு ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருபவர் சிவக்குமார். கஜா புயல் சமயத்தில், தனது டீக்கடையில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் கடனை தள்ளுபடி செய்த சிவக்குமார், தற்போது மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகிறார். சாதாரணமான டீக்கடையில் கிடைக்கும் வருவாயில், லாபத்தை எதிர்பார்க்காமல் மரம் வளர்த்து பசுமை பரப்பும் சிவக்குமாரின் சேவை, வாடிக்கையாளர்களை நெகிழ வைத்துள்ளது.
தற்போது பத்தாயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 500 மரக்கன்றுகளை முதல்கட்டமாக வழங்கியுள்ள சிவக்குமார், இதேபோல், தன்னால் இயன்ற அளவுக்கு மரக்கன்றுகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார். தன்னை வாழ வைத்த பூமிக்கு சேவையாற்ற துடிக்கும் இந்த டீக்கடைக்காரர், மரக்கன்றுகளை வழங்கும் தனது செயலால் மக்களின் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிடுவார் என்பதில் சந்தேகமில்லை.
Loading More post
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
‘எங்க கட்சிக்காரங்களே இப்படி செய்வாங்கனு கொஞ்சமும் நினைக்கல’- வேதனையில் ஆதித்ய தாக்கரே
Online Games: ‘ அவசர சட்டம் வரலாம்’- நீதிபதி சந்துரு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
அமெரிக்காவில் 46 அகதிகளின் சடலங்களுடன் நின்ற கண்டெய்னர் லாரி!
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai