Published : 22,Aug 2019 04:25 PM

ப.சிதம்பரத்தை காவலில் விசாரிக்க நீதிமன்றம் தீர்ப்பில் சொன்ன காரணங்கள்..!

CBI-Court-reasons-for-P-Chidambaram-s-5-day-custody

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் விசாரிக்க உத்தரவிட்டதற்கான காரணங்கள் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து நேற்றிரவு சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, முதல்கட்ட விசாரணையை முடித்து கொண்டு ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என சிபிஐ புகார் தெரிவித்தது. வழக்கு குறித்து சிபிஐ தரப்பில் எழுப்பப்பட்ட எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை எனவும் அதனால் ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் எனவும் சிபிஐ தரப்பு வாதாடியது.

இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தார். இந்தத் தீர்ப்பில், “இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவமானது. இந்த வழக்கில் ஆழமான விசாரணை தேவைப்படுகிறது. மேலும் இவ்வழக்கில் அதிகளவில் பணம் சம்பந்தப்பட்டுள்ளதால் ஆழமான விசாரணை மிகவும் அவசியமாகிறது. அதேபோல குற்றம்சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிப்பது வழக்கிற்கு உதவியாக இருக்கும். ஆகவே ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்