Published : 17,May 2017 12:38 PM

குழந்தையைக் கடித்த நாய்க்கு மரண தண்டனை

Dog-sentenced-to-death-for-biting-child

குழந்தையைக் கடித்த நாய் ஒன்றுக்கு பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த மாகாணத்தின் அசிஸ்ட்டென்ட் கமிஷனர் ராஜா சலீம், இந்த மரண தண்டனையை விதித்துள்ளார். குழந்தை ஒன்றை அந்த நாய் கடித்ததால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் அந்த நாயைப் பிரியமாக வளர்த்து வந்த நாயின் உரிமையாளர், இந்த தண்டனையை எதிர்த்து எந்தக் கோர்ட்டுக்கும் போகத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். அந்த நாய் ஒரு வாரத்திற்கு முன்பு அந்தக் குழந்தையைக் கடித்ததாகவும், புகார் தெரிவித்த உடன் கைது செய்யப்பட்டு, ஒருவாரம் தனது அன்பான நாய் சிறை தண்டனையை அனுபவித்து விட்டதாகவும், இதற்கு மேல் மரண தண்டனை என்பது நீதி அல்ல என்றும் நாயின் உரிமையாளர் கூறியிருக்கிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்