ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழலைப் பொறுத்து கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா கடந்த 6ஆம் தேதி மத்திய அரசு நிறைவேற்றியது. இதனைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. மேலும் அங்கு கலவரம் எதுவும் நடப்பதை தடுக்க மக்களின் நடமாட்டத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனையடுத்து டெஹசின் பூனாவாலா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளான 144 தடை, தொலைபேசி இணைப்பு துண்டிப்பு, இணையதள சேவை முடக்கம் ஆகியவை நீக்கவேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது நீதிபதிகள், “ஜம்மு-காஷ்மீரில் இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் தொடரும்?” என்று கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய அரசு சார்பில் வாதாடிய அரசுத் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், “ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் சூழலை தினமும் மிகவும் கூர்ந்து கவனித்து வருகிறோம். இதுவரை அங்கு கலவரத்தால் ஒரு சிறு துளி இரத்தமும் சிந்தப்படவில்லை. அத்துடன் யாரும் அங்கு இறக்கவில்லை. ஆகவே அங்கு நிலவும் சூழலை பொறுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்” எனப் பதிலளித்தது.
இதனையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது அங்கு நிலவும் சூழல் குறித்து பார்ப்போம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!