Published : 13,Aug 2019 05:34 AM

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்- கிராமுக்கு ரூ 9 அதிகரிப்பு

Gold-rate-increased-in-chennai

தொடர்ச்சியாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது.

நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 28,824 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 9 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 28,896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த 15 நாட்களில் ஒரு சவரன் இரண்டாயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விலை உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பது, பலதரப்பு மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெள்ளியை எடுத்துக் கொண்டால், 1 கிராம் 48 ரூபாய் 50 காசுகளுக்கும் ஒரு கிலே 48,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்