வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடனான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில், இந்திய ஏ அணியின் கிருஷ்ணப்பா கவுதம் 6 விக்கெட் வீழ்த்தினார்.
இந்திய ஏ அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு ஏ அணியுடன் கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி, இப்போது நடந்து வருகிறது. இதில் இந்திய ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 201 ரன்கள் எடுத்தது. சாஹா 62 ரன்களும் கேப்டன் விஹாரி 55 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி ஆடியது. இந்திய ஏ அணியின் சுழற்பந்துவீச்சாளர் கிருஷ்ணப்பா கவுதமின் ஹாட்ரிக் விக்கெட்டால் அந்த அணி, 194 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அவர் ஹாட்ரிக் விக்கெட்டுடன் மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய ஏ அணி, 3 விக்கெட் இழப்புக்கு 23 ரன் எடுத்துள்ளது. நதீம் 5 ரன்களுடனும் சுப்மன் கில் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 3 வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.
Loading More post
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?