[X] Close

புதிய உச்சத்தில் தங்கம் விலை - ஒரே நாளில் ரூ.584 உயர்வு

gold-rate-reached-high-in-chennai

சென்னையில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தங்கத்தின் விலை சமீப காலமாக கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வந்தது. தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ584 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் மதிப்புள்ள ஒரு சவரன் தங்கம் ரூ27,064க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ3,383க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று ஒரு சவரன் தங்கம் 26,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரே நாளில் 584 ரூபாய் உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளை ஆடிப்பெருக்கு பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close