[X] Close

காலில் விழக்கூடாது: ரஜினி கண்டிஷன்

rajini-condition

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று முதல் ரசிகர்களை சந்திக்கிறார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சென்னை ஸ்ரீராகவேந்திரா மண்டபத்தில் இன்று முதல் வரும் 19ம் தேதி வரை ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார். ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், திருச்சி, நெல்லை உள்ளிட்ட 17 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக புகைப்படத்துடன் கூடிய பிரத்யேக அடையாள அட்டையும் ரசிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அனுமதி கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் போது ரசிகர்களுடன் ரஜினிகாந்த் கலந்துரையாட திட்டமிடப்படவில்லை. அவர்களுடன் புகைப்படம் மட்டும் எடுத்துக்கொள்கிறார். தன்னை சந்திக்க வரும் ரசிகர்கள் மாலை அணிவிப்பது, பரிசுப் பொருட்களை போன்ற மரியாதைகள் வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
காலில் விழவே கூடாது என்றும் அன்புக் கட்டளையிட்டிருக்கிறார். 2009ஆம் ஆண்டு சிவாஜி திரைப்படம் வெற்றியடைந்தபோது ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், அதன்பிறகு இப்போதுதான் அவர்களை சந்திக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close