
நம் மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களுக்கு ஏற்ப, டிஎன்ஏ-வில் மாற்றங்கள் ஏற்படலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
விரைவில் வயதாவதற்கும், இறப்பதற்கும் டெலோமேர் விளைவுதான் காரணம் என்பது நமக்கு தெரியும். டெலோமேர் என்பது டிஎன்ஏ-வில் இருக்கும் ஒரு பகுதி. இது
குறைவதாலேயே நமக்கு வயதாகிறது. இப்போது ஒரு புது ஆராய்ச்சியில் உங்களது எதிர்மறை எண்ணங்கள் டெலோமேரை பாதிக்கும் என கண்டுபிடித்துள்ளனர். அதாவது
நீங்கள் பிறக்கும் போது ஒரு குறிப்பிட்ட குணங்கள் உள்ள மரபணுக்களுடன் பிறந்திருந்தாலும், அவை உங்களது எண்ணங்களுக்கு ஏற்ப மாற்றத்திற்கு உள்ளாகும் என
கூறுகிறது இந்த ஆராய்ச்சி. அடிக்கடிக் கோபப்படுவது நீங்கள் சீக்கிரம் வயதாகவும், இறக்கவும் வித்திடும் என்கிறார்கள். உங்கள் எதிர்மறை எண்ணங்களுக்கு ஏற்றவாறு
டெலோமேர் சிறியதாகுமாம்.
இதனால் எதிர்மறை எண்ணங்கள் உள்ளவர்களுக்கு வியாதிகள் வந்தாலும் குணமாக நீண்ட காலம் ஆகும் என்கிறார்கள். மேலும் எந்த அளவிற்கு நேர்மறை எண்ணங்களை
நினைக்கிறோமோ அந்த அளவிற்கு ஆரோக்கியமாக வாழலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது நடிகர் விவேக் ஒரு படத்தில் காமெடியாக சொல்வார், ‘ஏல டோன்ட் வொரி, பி ஹேப்பி’ என்று. அதைப் போல கவலைகள் மறந்து கலகலப்பாக இருந்தால்
வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்பதைதான் இந்த ஆராய்ச்சியும் சொல்கிறது.