Published : 30,Jul 2019 12:57 PM

“சுனில் கவாஸ்கர் கருத்தை வரவேற்கிறோம், ஆனால் - இந்திய அணித் தேர்வாளர் வருத்தம்

It-is-very-unfortunate--Chief-selector-MSK-Prasad-on-Sunil-Gavaskar-s--lame-duck--comment

சுனில் கவாஸ்கர் தெரிவித்த கருத்துகள் துரதிருஷ்டவசமானது என இந்திய அணித் தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு எதிரான இந்திய அணித் தேர்வு குறித்து அண்மையில் கருத்து தெரிவித்திருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், “தற்போது உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவினர் நொண்டி வாத்தை போல் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் எவ்வாறு விராட் கோலியை மீண்டும் கேப்டனாக தேர்வு செய்தனர். ஏனென்றால் உலகக் கோப்பை தொடரில் சரியாக விளையாடாத கேதார் ஜாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் கேப்டன்ஷிப்பில் சரியாக சொபிக்கவில்லை. ஆகவே அவரை மட்டும் ஏன் இன்னும் கேப்டனாக வைத்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள இந்திய அணியின் தலைமை அணித் தேர்வாளர் எம்.எஸ்.கே பிரசாத், “அணித் தேர்வுக் குழுவில் உள்ள அனைத்து தேர்வாளர்களுமே அனைத்து தரப்பு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். சர்வதேச போட்டிகளை தவிர்த்து நாங்கள் 477 முதல் தர கிரிக்கெட்டில் விளையாடியுள்ளோம். 200 முதல்தர கிரிக்கெட் போட்டிகளை எங்கள் சமகாலத்தில் கண்டுள்ளோம். அணி வீரர்களை தேர்வு செய்ய இதைவிட பெரிய அனுபவம் தேவையில்லை. இது போதும் என நினைக்கிறேன்.

இங்கிலாந்து அணியின் சேர்மேன் ஈ.டி.ஸ்மித் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியவர். ஆஸ்திரேலிய அணியின் தலைமை அணித் தேர்வாளர் ட்ரெவோர் ஹோன்ஸ் 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றவர். ஆனால் 128 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 244 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய மார்க் வாக், ட்ரெவோர் ஹோன்ஸ்க்கு கீழ் தான் பணிபுரிகிறார். 

அணித் தேர்வு குறித்து சுனில் காவஸ்கார் தெரிவித்த கருத்து துரதிருஷ்டவசமானது. நாங்கள் அனுபவ வீரர்களை மிகவும் மதிக்கிறோம். அனைவரது கருத்துக்களையும் வரவேற்கிறோம். அவர்களது அனைத்து பார்வைகளும் ஏற்றுக்கொள்ளப்படும். அதேசமயம் புண்படுத்துப்படி வரும் கருத்துகள் எங்கள் குழுவை மேலும் பலப்படுத்தும். அதனால் எங்கள் ஒற்றுமை தான் அதிகரிக்கும்” என்று தெரிவித்தார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்