Published : 22,Jul 2019 01:59 AM
மின்சார வாகனங்களுக்கு வரி ரத்து ? - ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு வரியை முற்றிலும் ரத்து செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது.
வரும் 25ஆம் தேதி நடைபெறும் 36ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு வரியை முற்றிலும் ரத்து செய்யும் முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் சூரிய சக்தி மற்றும் காற்றாலை திட்டங்களுக்கு வரியை முழுவதுமாக ரத்து செய்யவும் ஜிஎஸ்டி கவுன்சில் கோரிக்கை விடுக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த மத்திய பட்ஜெட்டில், உள்நாட்டில் தயாராகும் மின்சார வாகனங்களுக்கு 12 சதவிகித வரியில் இருந்து ஐந்து சதவிகிதமாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.