சசிகலாவை வெளியில் எடுக்க சட்ட ரீதியிலான முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, வேலூர் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தினகரன், தங்கள் கட்சியை பதிவு செய்து கொண்டிருக்கிறோம் என்றும் பதிவு முடிந்தபிறகு தேர்தலை சந்திப்போம் எனவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ''சொந்த காரணத்திற்காக சுயநலத்தோடு சென்றவர்களை எங்களால் தடுக்க முடியாது. உண்மையான தொண்டர்கள், உண்மையான நிர்வாகிகள் எங்களோடு தொடர்ந்து பயணிப்பார்கள். சசிகலாவை வெளியில் எடுக்க சட்ட ரீதியிலான முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
நிச்சயம் அவர் வெளியே வருவார். கட்சியை விட்டு வெளியே சென்றவர்கள் மீது கட்சி நடவடிக்கை என்பது தொடர்ந்து கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து செய்வோம். ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு அனுமதிக்க மாட்டோம் என்கிறது, ஆனால் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். ஏற்கெனவே நீட் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என்ற தமிழக அரசு தற்போது அனுமதித்து விட்டார்கள். தேர்தல் வரும் பொழுது தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு பதிலளிப்பார்கள்'' என்று தெரிவித்தார்
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix