[X] Close

இரண்டு வாரங்களில் மூன்று தங்கம்...ஹீமா தாஸ் அசத்தல்..!

Indian-Sprinter-Hima-Das-Wins-3rd-International-Gold-Within-Two-Weeks

இரண்டு வாரங்களில் மூன்று தங்கப் பதக்கம் வென்று இந்திய தடகள வீராங்கனை ஹீமா தாஸ் அசத்தியுள்ளார்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த தடகள வீராங்கனை ஹீமா தாஸ். இவர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயம் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மூன்று தங்கப் பதக்கங்களை  ஹீமா தாஸ் வென்றுள்ளார்.


Advertisement

நேற்று நடைபெற்ற கிலாட்னோ மேமோரியல் தடகள போட்டியில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஹீமா தாஸ் தங்கப்பத்தக்கம் வென்றார். இந்தப் பந்தய தூரத்தை ஹீமா தாஸ் 23.43 விநாடிகளில் கடந்து அசத்தினார். இதேபோல இவர் கடந்த 2-ஆம் தேதி போலந்து நாட்டில்  நடைபெற்ற போசான் தடகள போட்டியில் 23.65 விநாடிகளில் 200 மீட்டர் ஓட்டப் பந்தைய தூரத்தை கடந்து தங்கம் வென்றார். 

இதற்கு பின்பு போலந்து நாட்டில் நடைபெற்ற மற்றொரு குட்னோ தடகள போட்டியில் மீண்டும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் இரண்டு வாரங்களில் ஹீமா தாஸ் மூன்று தங்கப்பதக்கம் வென்று இந்திய தடகள வரலாற்றில் ஒரு மகத்தான சாதனையைப் படைத்துள்ளார். 
 


Advertisement

Advertisement
[X] Close