யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் நேற்று நடந்த பேருந்து விபத்தில் தன் கணவர் மற்றும் ஒன்றரை வயது மகளை இழந்த பெண்ணின் கதறல் மருத்துவமனையில் உள்ள அனைவரையும் கண்கலங்கச் செய்துள்ளது
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து டெல்லிக்கு சென்ற பேருந்து யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் நேற்று விபத்துக்குள்ளானது. நேற்று காலை 5 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்தில் 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மீட்பு பணிகளை தொடங்கினர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் தன் கணவன் மற்றும் ஒன்றரை வயது மகளை இழந்த பெண்ணின் கதறல் மருத்துவமனையில் உள்ள அனைவரையும் கண்கலங்கச்செய்துள்ளது. நேற்று விபத்துக்குள்ளான பேருந்தில் சுனிதா, அவரது கணவர், மகன் மற்றும் மகள் பயணம் செய்துள்ளனர். தற்போது சுனிதாவும் மகனும் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். தன்னுடைய கணவனுக்கு டெல்லியில் இரும்பு பாலிஷ் செய்யும் வேலை கிடைத்ததால் நல்ல வாழ்க்கை கிடைத்துவிட்டதாக தாங்கள் டெல்லி புறப்பட்டோம் என கண்ணீர் மல்க கதையை கூறி கணவனை தேடியுள்ளார் சுனிதா.
உங்கள் கணவனும் மகளும் இறந்துவிட்டனர் எனக்கூறுவதற்கு மருத்துவமனையில் உள்ள யாருக்குமே தைரியம் இல்லை. கணவர் எங்கே இருக்கிறார் என்று தெரிந்தால் மட்டுமே தான் சிகிச்சை எடுத்துக்கொள்வேன் எனக்கூறி சுனிதா கதறி அழ, மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவருமே செய்வதறியாது நின்றுள்ளனர். உங்களது கணவரும் மகளும் எங்கேனும் சிகிச்சை பெறுவார்கள் எனக்கூறி சுனிதாவை மருத்துவர்கள் ஆறுதல் படுத்தியுள்ளனர்.
சுனிதா குறித்து பேசிய காவலர் ஒருவர், ''உடற்கூறாய்வு பட்டியலில் இருந்த பெண் குழந்தை குறித்து சுனிதாவிடம் கேட்டேன். அது தன் குழந்தை என அவர் அடையாளம் காட்டினார். ஆனால் குழந்தை இறந்துவிட்டது எனக்கூற என்னிடம் தைரியம் இல்லை. அதனால் குழந்தை சிகிச்சை பெறுகிறது என பொய்சொல்லிவிட்டேன்'' என தெரிவித்துள்ளார்
சுனிதா மனமுடைந்துள்ளதால் அவர் மனதளவில் தேறிய பிறகே உண்மையை கூற வேண்டுமென மருத்துவமனை நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Loading More post
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
'ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி' - வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்