Published : 10,May 2017 06:53 AM

திமுகவின் வைர விழா: தேசிய தலைவர்களை ஒருங்கிணைக்க ஸ்டாலின் திட்டம்

karunanidhi-vaira-vizha

இந்திய வரலாற்றில் தொடர்ந்து 60 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் கருணாநிதியின் சாதனையை போற்றவும், அவரது 94ஆவது பிறந்த நாளைச்சிறப்பாகக் கொண்டாடவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரமாண்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,கேரள முதல்வர் பிணராய் விஜயன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோரை திமுக எம்பி கனிமொழிநேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். அதே போல் மற்றொரு எம்பியான டிகேஎஸ்.இளங்கோவன், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், ஓடிசா முதல்வர் நவீன்பட்நாயக் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். திமுக செயல்தலைவராக கடந்த ஜனவரி மாதம் ஸ்டாலின் தேர்தெடுக்கப்பட்ட பின் நடத்தப்படும் மிகமுக்கியமான இந்த விழா, தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான பெரிய கூட்டணிக்கு அச்சாரமிடும் விழாவாகவும் பார்க்கப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதியைப் போலவே, செயல்தலைவர் ஸ்டாலினும் தேசிய தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாகவும், இந்த விழாவில்குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான எதிர்கட்சிகளின் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்கர்கள் தெரிவிக்கின்றனர். இந்தி திணிப்பு, நீட்தேர்வு போன்ற விவகாரங்களில் மத்திய அரசைக் கடுமையாக விமர்சிக்கும் ஸ்டாலினின், தேசியளவில் தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி எத்தகைய தாக்கத்தைஏற்படுத்தும் என்ற கேள்விக்கான பதில் இந்த விழாவில் கிடைக்கக்கூடும்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்