Published : 01,Jul 2019 01:32 AM

இன்றைய முக்கியச் செய்திகள்..!

Today-Top-News--01072019

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், அத்திவரதர் திருவிழா இன்று தொடங்கியுள்ளது. அத்திவரதரை தரிசிப்பதற்காக பல இடங்களிலும் இருந்து பக்தர்கள் காஞ்சிபுரம் வந்துள்ளனர்.

இரண்டு நாள் விடுமுறைக்கு பின்பு தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இதில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

திடீர் வேலைநிறுத்தம்...சென்னையில் பேருந்துகள் ஓடவில்லை..!

தென்னிந்திய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது. அனைத்து லாரிகளுக்கும் பணி வழங்க வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

தமிழ்மறவன் பட்டா‌ம்பூச்சியை, தமிழக அரசு சின்னமாக அறிவித்து ஆணை பிறப்பித்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்றது. இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்