ராமநாதபுரத்தில் முடங்கி கிடக்கும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடல்நீரை குடிநீராக்கும் புதிய திட்டதிற்கு அடிக்கல் நாட்டுவதையே பழனிசாமி அரசு பெரிய விழா எடுத்து கொண்டாடி வரும் நிலையில், ராமநாதபுரத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள ஆலையே முடங்கியிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி கவலை அளிக்கிறது. அதனை உடனடியாக செயல்படுத்துவது உட்பட குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் அலைகிறார்கள். சென்னையில் மிக மோசமாக உள்ளது. கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றனவா என்பதை ரயில்வே துறையிடம் ஆலோசிக்காமல் ரயிலில் தண்ணீர் கொண்டு வரப்போவதாக அறிவிக்கிறார்கள். முதலமைச்சரும், அமைச்சர் வேலுமணியும் பேட்டி கொடுக்கிறார்களே தவிர இதுவரை வேலூரில் இருந்து தண்ணீர் வந்தபாடில்லை.
ராமநாதபுரத்தில் முடங்கி கிடக்கும் கடல் நீரை
குடிநீராக்கும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்!
திசைதிருப்பும் அறிவிப்புகளுக்குப் பதிலாக குடிநீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்! pic.twitter.com/KnwICzEeuB— TTV Dhinakaran (@TTVDhinakaran) June 29, 2019
இந்த நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் எந்திரங்கள் பழுதடைந்து உள்ளன. அதனை சீரமைக்க ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்காததால் முடங்கி இருப்பதாக வெளியாகி உள்ள செய்தி வேதனை அளிக்கிறது. எனவே ராமநாதபுரத்தில் முடங்கி கிடக்கும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். திசைதிருப்பும் அறிவிப்புகளுக்குப் பதிலாக குடிநீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!