’’உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகள் இருக்கும்போது, சரத்குமார் பற்றி பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா?’’ என்று நடிகை ராதிகா சரத்குமார் விஷாலை கேட்டுள்ளார்.
நடிகர் சங்க தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடக்கிறது. இதில் நடிகர் நாசர் தலையிலான பாண்டவர் அணியும் பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணியும் போட்டியிடுகிறது. இந்நிலையில் பாண்டவர் அணி சார்பில் வெளியிடப்பட்ட பிரசார வீடியோவில், சரத்குமார், ராதாரவியால் நாடக நடிகர்கள் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகையும் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி, விஷாலுக்கு எதிராக அறிக்கை ஒன்றை இன்று காலை வெளியிட்டார்.
இதையடுத்து இப்போது சரத்குமார் மனைவி ராதிகாவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ஒட்டி, பாண்டவர் அணியினர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில், சரத்குமார் தலைவராக இருந்த போது எதையும் செய்யவில்லை என்றும் முறைகேடாக செயல்பட்டார்கள் என்றும் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பேசிய பழைய பல்ல வியை, வெட்கமே இல்லாமல் மீண்டும் வெளியிட்டுள்ளது, பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி வேடிக்கையாக இருக்கிறது. விஷால் ரெட்டி, நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுகளை இதுவரை நிரூபித்திருக்கிறீர்களா? நீங்கள் கொடுத்த புகார்கள் விசாரணையில் இருக்கும்போது, முன்பு சொன்ன பொய்யை மீண்டும் சொன்னால் உண்மையாகிவிடுமா?
உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகள் இருக்கும்போது, சரத்குமார் பற்றி பேச உங்களுக்குக் கூச்சமாக இல்லையா? படத்தயாரிப் பாளர்களின் பணத்தை செலவழித்துவிட்டு கோர்ட்டு வாசலில் நிற்கிறீர்களே... நீங்கள் நீதிமான் மாதிரி வீடியோ வெளியிட கொஞ்சமாவது அருகதை உண்டா?
இன்றைய தலைவர் நாசர் எதைக் கேட்டாலும், ’அப்படியா, இது எனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது’ என்று வழக்கம் போல் ஓடி ஒளிந்துகொள் வார். இப்படியே நீங்கள் பிரிவினை பேசி செயல்பட்டு வருவது நடிகர் சங்கத்தை ஒற்றுமைப்படுத்தவோ, நலிந்த கலைஞர்களுக்கு நல்லது செய்யவோ, ஒருபோதும் உதவாது. இனியாவது அடக்கத்தோடு செயல்பட முயலுங்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Loading More post
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்