[X] Close

5100 மி. ஆம்பியர் பேட்டரியுடன் புதிய லெனோவா பி2..!

Lenovo-P2-smartphone-launched-in-India-at-Rs--16-999

புத்தம் புது மாடல்களை வழங்கி வரும் லெனோவா நிறுவனம் தற்போது லெனோவா பி2 மாடலை புத்தாண்டு வரவாக இந்திய சந்தையில் களமிறக்கியுள்ளது.

புதிதாக வந்துள்ள இந்த மாடல் இதுவரை இல்லாத அளவு 5100 மி. ஆம்பியர் பேட்டரி தரத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
1080x1920 பிக்சல்கள் திறன் கொண்ட 5.5 இன்ச் முழு எச்டி திரையுடன், எல்இடி ஃபிளாஷ் உடன் முன்பக்க கேமரா 5 மெகாபிக்சலும், பின்புறம் 13 மெகாபிக்சலும் கொண்டுள்ளது இந்த மொபைல்.
லெனோவா பி2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ, அக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ப்ராசசர் மூலம் இயங்குகிறது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு திறன் கொண்டது.

சென்சார் வசதியுடன் 177 கிராம் எடையுடைய பி2 மாடல் போன் கோல்ட், கிரே ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.
இந்த லெனோவா பி2 ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் வருகிறது. அதாவது, 4ஜிபி ரேம் உடன் 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வகையிலும் மற்றும் 3ஜிபி ரேம் உடன் 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வகையிலும் கிடைக்கிறது.
3ஜிபி ரேம் உடைய மாடல் ரூ. 16,999 க்கும், 4ஜிபி ரேம் உடைய மாடல் ரூ. 17,999 க்கும் இந்தியாவில் தற்போது கிடைக்கிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close