Published : 24,May 2019 05:05 PM

டெல்லியை மிரட்டும் துப்பாக்கி கலாச்சாரம் - அச்சத்தில் மக்கள்

Another-gun-battle-on-Delhi-streets

தலைநகர் டெல்லியில் உள்ள ஜகாங்கிர்புரி குடியிருப்பு பகுதியில் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பத்தின் சிசிடிவி காட்சி வெளியா‌கியுள்ளது. 

டெல்லியின் ஜாங்கிர்புரி குடியிருப்பு பகுதியில் அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல், ஒரு நபரை துரத்தி சென்றது. அந்தக் கும்பலிடம் தப்பித்து ஓடி வரும் நபர், ஒரு வீட்டிற்குள் நுழைந்தார். இதையடுத்து துரத்தி வந்தவர்களில் ஒருவர் சாலையில் நின்றுக் கொண்டு, இரண்டு முறை துப்பாக்கியால் சுடுகிறார். பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச்செல்லும் போது, அப்பகுதியில் வசிப்பவர்கள் பாட்டிலை வீசினர். அவர்களை நோக்கியும் அந்தக் கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். நேற்று இரவு 9.22 மணியளவில் இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

அண்மையில் டெல்லியின் பரபரப்பான சாலையில் டிராபிக்கை நிறுத்தி, ரவுடி கும்பல் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதில் 2 ரவுடிகள் உயிரிழந்தனர். அந்தச் சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. இதைத்தொடர்ந்து டிக்டாக் பிரபலம் ஒருவர் டெல்லியில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவ்வாறு டெல்லியில் துப்பாக்கிக் கலாச்சாரம் பெருகியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்