’காஞ்சனா’ இந்தி ரீமேக்கின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராகவா லாரன்ஸ், இயக்கி, தயாரித்து நடித்த படம் ’காஞ்சனா’. இதில் சரத்குமார், லட்சுமி ராய்,. கோவை சரளா, தேவதர்ஷினி உட்பட பலர் நடித்திருந்தனர். 2011 ஆம் ஆண்டு வெளியாகி தமிழில் சூப்பர் ஹிட்டான இந்தப் படம், இப்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். ராகவா லாரன்ஸ் இயக்குகிறார். இந்திக்காக கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.தமிழில் வெளியான ’காஞ்சனா’வில் பேயை கண்டு நடுங்குபவராக லாரன்ஸ் நடித்திருப்பார். இந்தி ரீமேக்கில் பேயை நம்பாதவராகவும் பேயை கண்டு பயம் கொள்ளாதவராகவும் அக்ஷய்குமார் கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. அவர் மனைவியாக கியாரா அத்வானி நடிக்கிறார். காமெடிக் கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங், மும்பையில் தொடங்கி நடந்து வருகிறது.
(கியாரா அத்வானி)
படத்துக்கு ’லக்ஷ்மி பாம்ப் (Laxmmi Bomb)’ என்று டைட்டில் வைத்துள்ளனர். பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் வழங்க, ஷமினா என்டர்டெயின் மென்ட் மற்றும் துஷார் என்டர்டெயின்மென்ட் ஹவுஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தின் ஹீரோ அக்ஷய் குமார், தனது சமூக வலைத்தள பக்கத்தில் இன்று வெளியிட்டார். கண்ணுக்கு மையிடுவது போன்ற அந்த பர்ஸ்ட் லுக் போஸ் டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி