மதுரையில் அமையப்போவது தமிழ் அன்னை சிலையா..? இல்லை ஆரிய மாதா சிலையா..? என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2013-ஆம் ஆண்டு மதுரையில் 100 கோடி ரூபாய் செலவில் தமிழ்த் தாய் சிலை நிறுவப்படும் என அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். ஜெயலலிதாவின் அறிவிப்பு வெளியாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை நிறைவேற்ற தற்போது எடப்பாடி அரசு முன்வந்திருப்பதாக வைகோ குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரத்தில் தமிழன்னை வடிவம் கற்சிலையில் கூடாது; பளிங்குக் கல், பைபர், கண்ணாடி ஆகியவை கொண்டு உருவாக்கப்பட வேண்டும் எனத் தமிழக அரசின் பூம்புகார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை தமிழர்களின் நெஞ்சில் கனலை மூட்டி இருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார். தமிழினத்தின் தொன்மை வரலாற்றை நினைவு கூறும் வகையில் கற்சிலையாக தமிழ் அன்னை சிலையை வடித்தெடுப்பதற்கு மரபுவழி சிற்பிகள் தமிழ்நாட்டில் ஏராளமாக இருப்பதாக வைகோ கூறியுள்ளார்.
ஆனால் தமிழ்நாடு அரசு, பூம்புகார் நிறுவனத்தின் மேற்பார்வையில் வேதகால பிராமணிய, இந்து கலாச்சார முறைப்படி தமிழ் அன்னை சிலையை உருவாக்க திட்டமிடுவது கடும் கண்டனத்திற்குரியது எனக் குறிப்பிட்டுள்ள வைகோ, சங்ககால மரபையும், வேதகால மரபையும் எப்படி இணைக்க முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே தமிழர்களின் கலை, பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் ‘தமிழ் அன்னை’ சிலையை தமிழக சிற்பிகளைக் கொண்டு கற்சிலையாக மதுரையில் நிறுவிட தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
Loading More post
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
``பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தனும், ஆதார் கொடுக்கனும்"-உச்சநீதிமன்றம் உத்தரவு
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்