Published : 14,May 2019 03:25 AM

கோட்சே குறித்த பேச்சு: கமல் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

police-security-for-Kamal-Hassan-house

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள் ளது. இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். 

அப்போது அவர் பேசும்போது, “ முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. அங்கு தொடங்குகிறது அது. நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். அந்தக் கொலைக்கு பின்னணி கேட்க வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இது சமரச இந்தியாவாக சமமான இந்தியாவாக, மூவர்ண கொடியின் மூன்று நிறங்களும் அப்படியே இருக்கும்  இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன். அதனை மார்தட்டிச் சொல்வேன்” என்று குறிப்பிட்டார். 

இது சர்ச்சையானது. இதையடுத்து அவரது பேச்சுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அவரது வீட்டின் முன் சில இந்து அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தலாம் என்று வந்த தகவலை அடுத்து அவரது வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்