மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங்குக்கு குரல் வளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடந்து வருகிறது. கடைசி கட்ட தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான, முன்னாள் கிரிக் கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் ஏராளமான பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசிவருகிறார்.
அவர் கடந்த 28 நாட்களில் 80 பேரணிகளில் பங்கேற்று பேசியுள்ளார். இதில் குரல் வளை பாதிப்படைந்துள்ளது. இதனால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
’’தொடர்ச்சியான பிரசாரம் காரணமாக சித்துவின் குரல்வளை பாதிப்படைந்திருக்கிறது. நான்கு நாட்கள் பேசவே கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் சிகிச்சை முடிந்து மீண்டும் பிரசாரத்துக்கு திரும்புவார்’’ அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம், சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோதும் சித்துவின் குரல் வளை பாதிக்கப்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்ற அவர் மீண்டும் பிரசாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்