Published : 30,Apr 2017 03:23 PM

வசூலில் சாதனை படைக்கும் பாகுபலி 2

Bahubali-2-new-achievements

பாகுபலி 2 திரைப்படம் வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

உலகம் முழுவதும் நேற்று முன்தினம் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்ட பாகுபலி 2 திரைப்படம், முதல் நாளன்றே, 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 121 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதுபோன்று எந்தவொரு இந்திய படமும் முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்ததில்லை என்ற சாதனையை பாகுபலி 2 படைத்துள்ளது.

இரண்டாம் நாளான நேற்றும் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு பாகுபலி 2 வசூல் செய்திருப்பதாக, திரைப்படத் துறை தவகல்கள் தெரிவிக்கின்றன. சல்மான் கான், அமீர் கான் போன்ற முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களின் படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை, பாகுபலி 2 தகர்ந்தெறிந்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் வசூல் சாதனையை பாகுபலி 2-வால் நெருங்க முடியவில்லை. முதல் நாளில் கபாலி படம் சுமார் 22 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், பாகுபலி-2, 11 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்