[X] Close

''நாடு முழுவதும் மோடிக்கே ஆதரவு'' : அமித் ஷா நம்பிக்கை

Modi-will-get-PM-for-second-term-as-he-has-people-s-blessings--Amit-Shah

மக்களின் ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராவார் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி நகரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, தான் நாட்டின் எந்தப் பகுதிக்கு சென்றாலும், அனைவரும் மோடியின் பெயரைத் தான் உச்சரிப்பதாக தெரிவித்தார். மோடியின் பெயரை மக்கள் எழுப்புவது வெறும் முழக்கமல்ல, 125 கோடி மக்களின் ஆசிகள் என கூறிய அவர், மே 23 ஆம் தேதிக்குப் பிறகு, இரண்டாவது முறையாக அவர் மீண்டும் பிரதமர் பதவியில் அமருவார் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.


Advertisement

இதனிடையே டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியுள்ளார். சந்திரபாபு நாயுடு  ராகுல் காந்தியை சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சி கணிசமான தொகுதிகளை வெல்லத் தவறும் பட்சத்தில், காங்கிரஸ் கூட்டணிகள் செய்ய வேண்டியவை என்னென்ன என்பது குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும் தேர்தலுக்கு பிந்தைய சூழலை காங்கிரஸ் கட்சி எப்படி சந்திக்கும் எனபது குறித்து ஆலோசித்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close