பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஈராக் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது
கோடை விடுமுறை என்றால் சிறுவர்கள் வீட்டுக்குள் பெரும்பாலும் தங்க மாட்டார்கள். வெளியில் சுற்றிக்கொண்டு எதாவது விளையாடிக்கொண்டு பொழுதை கழிப்பார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. வீட்டை விட்டு வெளியவே செல்ல மறுக்கிறார்கள். கையில் செல்போன்களை வைத்துக்கொண்டு ஆன்லைன் விளையாட்டுகளிலேயே மூழ்கி கிடக்குகிறார்கள்.
ஆன்லைன் விளையாட்டும் வெறும் பொழுதுபோக்காக மட்டும் அல்லாமல் மன ரீதியாகவும் அவர்களை பாதிக்கிறது. விளையாடுபவர்களை அடிமைப்படுத்தும் அளவுக்கு ஆன்லைன் விளையாட்டுகளால் பிரச்னை உருவாகிறது. இதனை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் பல அரசுகள் முக்கிய பிரச்னையாகவே கவனம் செலுத்தி வருகின்றன.
குறிப்பாக பலரும் அடிமைப்படுத்தும் பப்ஜி விளையாட்டை தடை செய்ய பல நாட்டு அரசுகளும் யோசித்து வருகின்றன. இந்தியாவில் பப்ஜி விளையாட்டை குஜராத் அரசு ஏற்கெனவே தடை செய்துள்ளது. இன்னும் சில மாநிலங்கள் இந்த விளையாட்டை தடை செய்ய தீவிரமாக யோசித்து வருகின்றன. நேபாள அரசும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஈராக் அரசும் பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாலும், விளையாடுபவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈராக் அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஆன்லைன் விளையாட்டுகள் தேசிய பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai