மலேசியாவில் கூலி வேலைக்குச் சென்ற கணவரின் கை, காலை சிலர் உடைத்ததாகவும், அவரை மீட்குமாறும் ராமநாதபுரம் ஆட்சியரிடம் இளம்பெண் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் மேல்ஆய்க்குடி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் பஞ்சவர்ணம். இவரது கணவர் ராக்கன் என்பவர் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு மலேசியாவில் கூலி வேலைக்கு சென்றுள்ளார். அவர் தங்கியிருந்த இடத்தில் உடன் இருந்தவர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறில் அவரை உடன் இருந்தவர்கள் கடுமையாக தாக்கி கை, காலை உடைத்தாக தெரிகிறது. இதனால் ராக்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனால் அங்கு யாரும் அவரைப் பார்த்துக்கொள்ள ஆள் யாரும் இல்லை. இதனால் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவரை இந்திய வெளியுறவுத்துறை மூலம் தமிழக அரசு மீட்க வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தனது கணவரை விரைவில் தமிழகம் கொண்டுவர உதவி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.
Loading More post
ஐபிஎல் 2022: கடும் போட்டி - பிளே ஆஃப் செல்லும் அணிகள் எவை எவை?
ட்விட்டரில் ப்ளூ டிக் கோரிய முன்னாள் சிபிஐ அதிகாரிக்கு அபராதம் விதித்த டெல்லி நீதிமன்றம்!
மந்தைவெளி - பாரிமுனை பேருந்தில் நடத்துனரை வெளியே தள்ளிய 4 மாணவர்கள் கைது
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வு: இதுவரை 30 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
பிடித்தால் பணியாற்றுங்கள்; இல்லை வெளியேறுங்கள் - பணியாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் அறிவுறுத்தல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்