[X] Close

இந்திய காடுகள் அழிகின்றனவா? - குழப்பும் புள்ளிவிவரங்கள்!

India---s-forest-cover-loss-in-17-years-is-four-times-the-size-of-Goa

2001 முதல் 2018ம் ஆண்டுகளுக்கு இடையேயான 17 வருடத்தில் இந்தியா 1.6 மில்லியன் ஹெக்டேர் அளவிலான மரங்களை இழந்துள்ளதாக 'வேல்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட்' வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் இது மேம்போக்கான புள்ளிவிவரம் என ''ஃபாரஸ்ட் சர்வே ஆஃப் இந்தியா'' தெரிவித்துள்ளது

உலகுக்கே அச்சுறுத்தல் இருக்கும் வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமே காடுகள் அழிக்கப்படுவது தான். மரங்களின் எண்ணிக்கை குறைவதே வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது. இந்நிலையில் இந்தியக்காடுகள் குறித்து வேல்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட் (World Resources Institute) புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 2001 முதல் 2018ம் ஆண்டுகளுக்கு இடையேயான 17 வருடத்தில் இந்தியா 1.6 மில்லியன் ஹெக்டேர் அளவிலான மரங்களை  இந்தியா இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 


Advertisement

அதாவது இந்தியா இழந்துள்ள காடுகளின் அளவு கோவாவை விட 4 மடங்கு அதிகம். மேலும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து, திரிபுரா, மேகலாயா, மிசோரம், மணிப்பூர் ஆகிய இடங்களில் 50% மரங்களை இழந்துள்ளன. மேலும் 2000ம் ஆண்டை பொறுத்தவரை இந்தியாவின் நிலப்பரப்பில் 12% காடுகள். ஆனால் 2010ன் படி இந்தியாவின் நிலப்பரப்பில் 8.9 % மட்டுமே காடுகளாக இருந்துள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியாவுக்கான வேல்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட்டின் இயக்குநர் ருச்சிகா சிங், ''வடகிழக்கு மாநிலங்களில் காடுகளை மக்கள் பயன்பாட்டுக்காக மாற்றுவதும், மாறி வரும் வானிலை காரணமாகவும் காடுகள் அழிகின்றன'' என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் வேல்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தை 'ஃபாரஸ்ட் சர்வே ஆஃப் இந்தியா’ மறுத்துள்ளது. 2005 முதல் 2017ம் ஆண்டுகளுக்கு இடையேயான காலக்கட்டத்தில் மரங்களின் எண்ணிக்கை 91663 சதுர கிலோமீட்டரில் இருந்து 93815 சதுர கிலோமீட்டராக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும் தெரிவித்த 'ஃபாரஸ்ட் சர்வே ஆஃப்' இந்தியாவின் பொது இயக்குநர் சுபாஷ், வேல்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட் மேம்போக்கான புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. உலக பசுமையின் முக்கிய காரணமாக சீனாவும் இந்தியாவுமே இருப்பதாகவும், இந்த இரு நாடுகளிலும் பசுமை அதிகரித்திருப்பதாகவும் நாசாவும் தெரிவித்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

வேல்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட் 5மீட்டருக்கும் உயரமான பெரிய அளவிலான மரங்களை மட்டுமே கணக்கிடுகின்றன. இதனாலே புள்ளிவிவரத்தில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. ஆனால் எங்களின் புள்ளிவிவரத்தில் 2 மீட்டருக்கும் குறைவான தாவரங்கள் கூட கணக்கிடப்படுகின்றன என 'ஃபாரஸ்ட் சர்வே ஆஃப் இந்தியா’தெரிவித்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close