விருத்தாச்சலம் அடுத்த பரளுர் ஏரியில் அழுகிய நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் மீட்டனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பரவளுர் ஏரியில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் மிதந்தது. அப்பகுதியில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் இதைக்கண்டதும், விருத்தாசலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலில் ஆடையின்றி இருந்த அந்த சடலத்தை கைப்பற்றினர். அத்துடன் உடலில் காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. மேலும் அந்தப் பெண்ணின் உடல் ஒருவாரமாக அந்த ஏரியில் கிடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர், அந்த பெண்ணை யாரேனும் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டு, ஏரியில் வீசி சென்றுவிட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர். அத்துடன் அப்பெண் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணா ? எனவும், அவர் ஏரியில் இறந்து கிடந்ததற்கு வேறு ஏதேனும், காரணம் இருக்குமா என்றும் விசாரித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அப்பெண் யார் என்றும், அவரது பின்னணி குறித்து விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.
Loading More post
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்