[X] Close

மதுக்கடையை நொறுக்கியவர்களை கைது செய்வதா?: மக்கள் போராட்டம்

peoples-protest-on-against-to-TN-tasmac

திருப்பூர், முதலிபாளையம் பகுதியில் மதுக்கடையை அடித்து நொறுக்கிய 200 பேர் மீது மாவட்ட காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அதைக் கண்டித்து அப்பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

முதலிபாளையத்தில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது பார் மற்றும் மதுக்கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 500 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 24 பேர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா தெரிவித்தார். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்கக்கோரியும், வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் முதலிபாளையம் பகுதியில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close