[X] Close

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுக பிரமுகர் கைது

Flying-squads-arrest-ADMK-worker-for-bribing-voters-in-Usilampatti

உசிலம்பட்டி அருகே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுக பிரமுகரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


Advertisement

தமிழகத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைப்பெற உள்ள நிலையில் தற்போது பணப்பட்டுவாடா குறித்த அதிக புகார்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும், காவல்துறையினரும் பணப்பட்டுவாடாவை தடுக்க அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். 

Image result for வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா


Advertisement

இந்நிலையில், மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் பணப்பட்டுவாடா செய்த அதிமுக பிரமுகர் ஒருவரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து கொண்டிருப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

Related image

அதன் அடிப்படையில் தாசில்தார் தமிழ்ச்செல்வி தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் குப்பணம்பட்டிக்கு விரைந்தனர். அப்போது குப்பணம்பட்டியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் ராசு என்பவர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்தார். அவரை கையும் கலவுமாக பிடித்த அதிகாரிகள், ராசுவிடமிருந்து ரூ. 1 லட்சத்து 6 ஆயிரம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, அவரையும் கைது செய்தனர். உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் பணத்தை ஒப்படைத்த அதிகாரிகள் ராசுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close