சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தமிழில் தங்களின் செல்லப் பெயர்களை எழுதி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
12வது ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. ஒவ்வொரு போட்டியும் சுவாரஸ்யம் குறையாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 6 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்நிலையில் இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு சிஎஸ்கே வீரர்கள் தமிழில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் தங்களின் செல்லப் பெயர்களை முரளி விஜய் எழுதி கொடுக்க அதைப்பார்த்து சிஎஸ்கே வீரர்களும் தமிழில் எழுதுகின்றனர். ரெய்னா 'சின்ன தல' என்றும், இம்ரான் தாஹீர் 'ஓடினேன்' என்றும் எழுத இந்தச் செல்லப்பெயர் பட்டியல் நீள்கிறது. இவர்களுக்கு தமிழ் ஆசானாக இருந்த முரளி விஜய் கடைசியாக தனது பெயரை எழுதி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்கிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. என்ன இருந்தாலும் எங்க புலவர் ஹர்பஜனை காணவில்லையே என்று சிஎஸ்கே ரசிகர்கள் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.
Super wishes from the super kings! Start off the year with Thamizh Singams inking the script with a special wish for the #WhistlePoduArmy! #WhistlePodu #Yellove
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!