நாடாளுமன்றத்தேர்தல் தேதி நெருங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் வீடியோ விளம்பரங்கள் மூலம் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
பாஜக தனது ட்விட்டர் பாக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஒரு பணக்காரப்பெண் காரில் தனது சொந்த ஊரான பாட்டி ஊருக்கு குடும்பத்துடன் செல்கிறார். செல்லும் முன் பாட்டி ஊரை நினைத்து மிகவும் தனது அம்மாவிடம் கடிந்து கொள்கிறார். காரணம் அங்கு வீடு, மின்சாரம், மின்விசிறி, கழிவறை ஆகியன இல்லை என்பதே. ஆனால் ஊருக்கு சென்றதும் பார்த்து ஆச்சரியப்படுகிறார்.
வேண்டும் மோடி!! மீண்டும் மோடி!! #Vote4BJP pic.twitter.com/lH7voY9rNN— BJP Tamilnadu (@BJP4TamilNadu) April 12, 2019
ஏனென்றால் அங்கு மேற்கூறிய அனைத்தும் இருக்கிறது. எப்படி இது சாத்தியம் என தனது தாத்தாவிடம் அந்தப் பெண் கேட்கிறார். அதற்கு அவர், மோடியின் புகைப்படத்தை காட்டுகிறார். மேலும் மோடியின் திட்டங்கள் குறித்தும் விளக்குகிறார். இறுதியாக மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்று முடிகிறது.
பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி!
ஆதிக்கவாதிகளும் வேண்டாம்!
அடிமைகளும் வேண்டாம்!#தமிழ்மானம்காப்போம் pic.twitter.com/Sq7zVWS8hi— M.K.Stalin (@mkstalin) April 8, 2019
இதேபோல் திமுகவும் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. அந்த வீடியோக்கள் ஒன்றில் ஒரு பெண் பேசுகிறார். அதில், “ ஒரு பெண்ணை பெத்து வளர்க்க இங்க என்ன பாதுகாப்பு இருக்கு. போலீஸ்காரர்கள் முதல் ஆளுங்கட்சிகாரர்கள் வரைக்கும் எல்லாரும் சேர்ந்து நம் தமிழ்நாட்டையே தலைகுணிய வைத்துவிட்டார்கள். இப்ப வெட்கமே இல்லாம ஓட்டு கேட்க வராங்க. ஆதிக்கவாதிகளும் வேண்டாம். அடிமைகளும் வேண்டாம்.” எனக் கூறி முடிக்கிறார்.
விண்ணை முட்டும் விலைவாசி!
ஆதிக்கவாதிகளும் வேண்டாம்!
அடிமைகளும் வேண்டாம்!#தமிழ்மானம்காப்போம் pic.twitter.com/xjbGw5cHuh— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) April 9, 2019
இதேபோல் மற்றொரு வீடியோவில் பேசும் பெண் “காய்கறியில் இருந்து மளிகை சாமான் வரைக்கும் எல்லா பொருட்களும் தலைக்கு மேல் விலை ஏறிடுச்சு. 8 வருஷமா இவங்கதானே ஆட்சில இருக்காங்க? டெல்லி காலில் விழுந்து மெகா கூட்டணி அமைக்குறதுல மட்டும் மும்முரமா இருக்குறவங்க நமக்கு தேவையா?ஆதிக்கவாதிகளும் வேண்டாம். அடிமைகளும் வேண்டாம்” எனக் கூறுகிறார்.
மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்வு ! #AIADMK #Mission40 #VoteforAIADMKAlliance pic.twitter.com/GlxSUoFJH4— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 12, 2019
அதிமுக வெளியிட்டுள்ள வீடியோவில், “தொடரட்டும் இந்தப் பொற்காலம். ஜொலிக்கட்டும் வரும் எதிர்காலம். திமுக ஆட்சியில் 15 புதிய மருத்துவ கல்லூரிகள் மட்டுமே தொடங்கப்பட்ட நிலையில், அதிமுக ஆட்சியில் 40 புதிய மருத்துவகல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மத்தியில் நல்லாட்சி தொடரட்டும். மாநிலத்தில் வளர்ச்சி பெருகட்டும். வாக்களிப்பீர் அதிமுக கூட்டணிக்கு” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai