[X] Close

இன்று கோவை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி

PM-Modi-arrives-Coimbatore-today

தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகிறார்.

டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வரும் பிரதமர் நரேந்திர மோடி, கொடீசியா மைதானத்தில் இரவு 7 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பேசுகிறார். இந்த கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும், அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.


Advertisement

பிரதமர் கோவை வருவதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, வருகிற 13 ஆம் தேதி தேனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்தை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close