ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் டாஸ் வென்று முதலில் பந்துவீச தீர்மானித்தது.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி, ஹைதராபாத் அணிகள் தலா 5 போட்டிகள் விளையாடி உள்ளன. அவற்றில் 3 வெற்றிகள் 2 தோல்விகள் என இரண்டு அணிகளுமே 6 புள்ளிகளுடன் உள்ளன. பஞ்சாப் கடைசி போட்டியில் சென்னையிடமும், ஐதராபாத் அணி மும்பையிடமும் தோல்வியை தழுவியது. அதன்படி முந்தைய போட்டிகளில் தோல்வி அடைந்த இவ்விரு அணிகளும் வெற்றி பாதைக்கு திரும்ப போராடும் என்பதால் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சாளர்களிடம் சற்று தடுமாறுகின்றனர். கடைசி ஆட்டத்திலும் சென்னை அணி சுழற்பந்து வீச்சாளர்களை வைத்தே பஞ்சாப் அணிக்கு ஆட்டம் காட்டியது. அதனால் இன்றைய போட்டியிலும் ஐதராபாத் அணி சுழற்பந்து வீச்சாளர்கள் பஞ்சாப் அணிக்கு சவாலாக இருப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே சமயம் காயத்தில் இருந்து மீண்டுள்ள கெயில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை தொடங்க கவனம் செலுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆண்டிரு டை, முருகன் அஸ்வின் ஆகியோருக்கு பதிலாக ராஜ்புட், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹைதராபாத் அணியில் மாற்றங்கள் இல்லை.
Loading More post
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி! அதிர்ந்துபோன வாடிக்கையாளர்!
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!