பாஜகவின் திட்டம் என்பதால் அன்றைக்கு திமுக 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரை ஆதரித்து டிடிவி தினகரன் தூத்துக்குடி தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “கனிமொழி திருப்பதி வெங்கடாஜலபதியை பற்றி தவறாக பேசினார். ஆனால் அவரது தாயார் திருச்செந்தூர் வந்து முருகனை வணங்கிவிட்டு செல்கிறார்.
யாரை ஏமாற்ற இந்த வேஷம். உண்மையான இந்துவாக இருந்தாலும் சரி, உண்மையான கிருஸ்துவராக, இஸ்லாமியராக இருந்தாலும் சரி இன்னொரு மதத்தை அவதூறாக புண்படுத்தும்படி பேசுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை இழந்த திமுக இந்துக்களின் வாக்கு வங்கியையாவது தக்க வைத்து கொள்ள வேண்டி நாங்கள் இந்துக்களின் எதிரி அல்ல என்று பேசுகிறார்கள்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வாங்கி தருவதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும், மக்களை பாதிக்கும் திட்டங்களை அனுமதிக்காமல் தடுப்பதற்கும் அரசு எந்தச் செயல்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை. சட்டமன்றத்தில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத திமுக தற்போது காங்கிரசுக்கு சில வெற்றிகள் வருவதால் மாற்றி பேசுகின்றது. பாஜகவின் திட்டம் என்பதால் அன்றைக்கு திமுக 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” எனப் பேசினார்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!