முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், அவர் சிகிச்சை பெற்ற சென்னை அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தியது. அப்போது ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. சிகிச்சை முறைகள் குறித்து நன்கு அறிந்த 21 மருத்துவர்கள் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த மனுவை நிராகரித்த உயர்நீதிமன்றம், மருத்துவர் குழு அமைக்கத் தேவையில்லை என்று உத்தரவிட்டது. இதைத் தொடரந்து, அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள், விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
மருத்துவர்கள் ரவிச்சந்திரன், மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட மருத்துவர்கள், டெக்னிஷியன் காமேஷ், காசாளர் மோகன் ரெட்டி ஆகியோர், வரும் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!